நாளை புரட்டாசி மாத பிறப்பு.. மகாளய அமாவாசை.. குரு வாரம்.. என்ன செய்யலாம்?! - Seithipunal
Seithipunal


புரட்டாசி மாத விரதமும், அதன் பலன்களும்:

இன்றுடன் ஆவணி மாதம் நிறைவுறுகிறது. நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.

நாளைய தினம் புரட்டாசி மாத பிறப்பு மட்டுமல்ல...

மகாளய அமாவாசை

குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை.

அதுமட்டுமின்று, புரட்டாசி மாதத்தில் இரண்டு முறை அமாவாசை வருகிறது.

நாளை செப்டம்பர் 17ஆம் தேதி, வியாழக்கிழமை, புரட்டாசி மாதப் பிறப்பு தர்ப்பணமும், மகாளய அமாவாசை தர்ப்பணமும் என இரண்டு தர்ப்பணம் செய்து முன்னோர்களை வணங்கி வழிபட வேண்டும். அற்புதமான இந்த நன்னாளில், நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியை பெற்றிடுங்கள்.

குரு வார வியாழக்கிழமை தட்சிணாமுர்த்திக்கு உகந்த நாள் என்பதால் குரு தட்சிணாமூர்த்தியையும், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் பெருமாளையும் வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களை பெற்று வளமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள்.

இதேபோல் புரட்டாசியில் கடைபிடிக்க வேண்டிய சில விரதங்கள் :

சித்தி விநாயக விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.

சஷ்டி - லலிதா விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வாள்.

அனந்த விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

அமுக்தாபரண விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

மஹாலட்சுமி விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்:

புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tomorrow ammavasai purattasi special


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->