சனிக்கிழமையில் பிறந்தவரா நீங்க? கட்டாயம் செய்ய வேண்டிய சந்திர கிரகண பரிகாரம் இதோ!! - Seithipunal
Seithipunal


மகாளய அமாவாசையன்று 178 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் இன்று நள்ளிரவு ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அதன்படி இன்று இரவு 01:05 மணிக்கு தொடங்கி இரவு 01:44 மணிக்கு மத்தியம் பெற்று இரவு 02:23 மணிக்கு முடிகிறது. இன்று நிகழும் சந்திர கிரகணம் 01 மணிநேரம் 18 நிமிடங்களுக்கு அச்வதி நக்ஷத்ரத்தில் மேற்க்கில் பிடித்து வட மேற்க்கில் விடுகிறது.

அஸ்வதி நட்சத்திரக்காரர்கள் பரிகாரமும், பரணி, மகம், மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் சாந்தியும் செய்து கொள்ளவும்.

பரிஹார விவரம்:

கருப்பு உளுந்து, கருப்பு நிற வஸ்த்ரம், அரிசி, தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம், தட்சணையுடன் தானம் கொடுக்கவும். சனிக்கிழமை பிறந்தவர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ளவும்.

இரவு 01.05 மணிக்கு கிரஹணம் பிடித்த உடன் ஒரு ஸ்நானம் பிறகு பிராத்தனை செய்யவும். இரவு 01.34 மணிக்கு மத்யமத்தில் தர்பணம் செய்த பிறகு கிரஹணம் விடும் வரை பிரார்த்தனை செய்யவும். கிரஹணம் முடிந்த பிறகு இரவு 02.25 மணிக்கு மீண்டும் ஒருமுறை ஸ்நானம் செய்த பிறகு சந்திர தர்சனம் காணலாம்.

கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் மற்றும் குழந்தைகள் விதி விலக்கு எடுத்துக்கலாம். கர்ப்பிணி பெண்கள் கிரகண சமயத்தில் வெளியே வர வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Lunar eclipse remedy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->