தை பிறந்தால் வழி பிறக்கும்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.?!
thai month astrology
மேஷம் :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தந்தை வழி வியாபாரத்தின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உயர்கல்வியில் புதுவிதமான ஆராய்ச்சிகளால் புகழப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
ரிஷபம் :
பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் உண்டாகும். பெற்றோர்களின் ஆசிகள் மற்றும் ஆலோசனைகள் நற்பலனை அளிக்கும். தொழில் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். அரசாங்க துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நண்பர்களால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த பலன் சாதகமாகும். அந்நியர்களின் எதிர்பாராத உதவியினால் மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விளை நிலங்களால் சுபவிரயம் ஏற்படும். கடல் வழி பயணங்களால் மனம் மகிழ்வீர்கள்.
மிதுனம் :
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் மனதை சங்கடப்படுத்தும். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேன்மைக்கான கூடுதல் பணிகளில் ஈடுபடுவீர்கள். தந்தையிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் தொடர்பான பணிகளில் ஈடுபடும்போது கவனம் வேண்டும். மற்றவர்களிடம் வேலை வாங்கும்போது கனிவுடன் இருப்பது நன்று.

கடகம் :
வியாபாரத்தின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். அரசு பணிக்கான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகன போக்குவரத்தில் மிகுந்த கவனம் வேண்டும். தந்தையின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். போட்டிகளில் பங்கு பெற்று இலாபம் அடைவீர்கள். உடல் தோற்றப்பொலிவிற்கான புதிய முயற்சிகளை செய்வீர்கள். பெரிய நிறுவனங்களின் மூலம் கெளரவ பதவிகள் வந்தடையும். அயல்நாட்டு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கடன்காரர்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும்.
சிம்மம் :
சிந்தனையின் போக்கில் ஒரு புதிய மாற்றம் உண்டாகும். தாயின் ஆதரவினால் பொருட்சேர்க்கை உண்டாகும். செய்யும் தொழிலில் புதுவிதமான மாற்றங்களை செயல்படுத்தி இலாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நிர்வாக பொறுப்புகளால் இலாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொதுகூட்டப் பேச்சுக்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது சுபிட்சத்தை உண்டாக்கும்.
கன்னி :
மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்கள் தொடர்பான விரயம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையில் அன்யோன்யம் அதிகரிக்கும். உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். முக்கிய முடிவுகளை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
துலாம்:
அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். மனதில் ஏற்பட்ட சஞ்சலம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனை தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். சுயதொழில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். ஆன்மிக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். பலனை எதிர்பாராமல் செய்த செயல்களால் இலாபம் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்கள் நிதானத்துடன் செயல்படவும்.

விருச்சகம் :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் மாற்றம் நேரிடலாம். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்லும் நிலை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் இலாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். சர்வதேச வணிகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாலின ஊழியர்களிடம் சற்று கவனம் வேண்டும். எதிர்பார்த்த உதவிகளால் மாற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தொழில் கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் உண்டாகும்.
தனுசு :
தொழிலில் வருமானம் மேம்படும். பேச்சுக்களில் வேகத்தையும், கோபத்தையும் கட்டுப்படுத்துவது நன்மை அளிக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் இலாபத்தைக் கொடுக்கும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். அரசு அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான ஆதரவு கிடைக்கும். வாகன பயணங்களால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளால் சுப விரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் கவனத்துடன் செயல்படவும்.
மகரம் :
எதிர்பாராத சில செயல்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் கவனத்துடன் செயல்படவும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். திடீர் யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். உழைப்பிற்கேற்ற புகழ் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றி முடிவு எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

கும்பம் :
சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நீர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். தொழிலில் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயினால் சாதகமான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்களில் இடர்பாடுகள் தோன்றி மறையும். வெளிவட்டாரங்களில் மரியாதை உயரும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
மீனம் :
எதிரிகளின் செயல்பாடுகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகளும், சூழலும் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவியின் உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.