கிருஷ்ணரை எப்படி அழைத்து வழிப்பட்டால், சிறப்பு தெரியுமா.!
spiritual news in tamil
முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம்
இருக்கும்?” என்ற வினா எழுந்தது. உடனே அரச சபையை கூட்டி அனைவரிடமும் இதற்கான விடையை வினவினார் மன்னர்.
-
யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார். அந்த முனிவரிடம், “கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார் மன்னர்.
அதற்கு அந்த முனிவர், “கடவுள் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறார்” என்று பதில் அளித்தார். “அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே
வந்து விடுவார் அல்லவா?” என்று கேட்டார் மன்னர். அதற்கு அந்த முனிவர், “எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது” என்றார்.

“புரியும்படி கூறுங்கள்” என்று அந்த மன்னர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த முனிவர், “துரியோதனன் சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது, “வைகுண்ட வாசா! காப்பாற்று” என்று கிருஷ்ணரை அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை.
“துவராகை நாயகனே!” என்னை காப்பாற்று என்று அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன் வரவில்லை. “இதயத்தில் இருப்பவனே!” என்று
கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான் கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக்காத்தார்.
கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார். எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல் கடவுளுக்கு கேட்கும்.
உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால் உடனே வந்து அருள் பாலிப்பார்” என மன்னருக்கு விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.