நம்முடன் இருப்பவர் தோழனா?.. பகைவனா?.. சொல்ல வருகிறது.. சனிப்பெயர்ச்சி...!
sani bahawan for or not
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் காலம் 2 1/2 ஆண்டுகள் ஆகும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள் நடக்கும். சனி இருக்கும் இடத்தை பொறுத்தே சுப பலன்களோ அல்லது அசுப பலன்களோ உண்டாகும்.
சனிபகவான் ஜோதிடத்தில் ராசி கட்டத்தில் நிற்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் தன் பலனை செயல்படுத்துகிறார்.
ராசிக்கு 1ல் சனி இருந்தால் ஜென்ம சனி
ராசிக்கு 2ல் சனி இருந்தால் பாத சனி
ராசிக்கு 3ல் சனி இருந்தால் சகாய சனி
ராசிக்கு 4ல் சனி இருந்தால் அர்த்தாஷ்டம சனி
ராசிக்கு 5ல் சனி இருந்தால் பஞ்சம சனி
ராசிக்கு 6ல் சனி இருந்தால் ரோக சனி
ராசிக்கு 7ல் சனி இருந்தால் கண்டக சனி
ராசிக்கு 8ல் சனி இருந்தால் அஷ்டம சனி
ராசிக்கு 9ல் சனி இருந்தால் பாக்கிய சனி
ராசிக்கு 10ல் சனி இருந்தால் கர்ம சனி
ராசிக்கு 11ல் சனி இருந்தால் லாப சனி
ராசிக்கு 12ல் சனி இருந்தால் விரய சனி
சனிபகவான் நமக்கு தரக்கூடிய துன்பத்தின் மூலம் நம்முடன் இருப்பவர் தோழனா?... அல்லது பகைவனா?... என்பதை தெளிவாக அடையாளம் காட்டிக்கொடுப்பார்.