பெண்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ''ஆன்மீக தகவல்கள்''!
Pengalukana Anmika thagavalgal
இந்த பதிவில் பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள் குறித்து பார்க்கலாம். இது கல்யாணம் ஆன பெண்களுக்கும் ஆகப் போற பெண்களுக்கும் முக்கியமானதாக இருக்கும். நமது வீட்டில் பொதுவாக சாஸ்திரங்களும் ஆன்மீகங்களையும் அதிகமாக பார்க்கிறோம்.
அதிகமாக அய்யர் வீட்டு பெண்கள் சாமி கும்பிடுவதற்கும் விளக்கு ஏற்றுவதற்கும் எந்த நேரங்கள் உகந்தது என அறிந்து வைத்திருப்பார்கள்.
* பொதுவாக பெண்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் சாணம் சேர்த்து தண்ணீர் தெளித்து வாசலில் கோலம் போடுவது நல்லது. அப்போது பெண்கள் மேல் தெற்கு நின்றபடி கோலம் போட வேண்டும்.

* அமாவாசை, தவசம் போன்ற நாட்களில் வாசலில் கோலம் இடுவதை தவிர்க்க வேண்டும். வியாழக்கிழமை நாட்களில் இரவு சாப்பிட்ட சமையலறையை சுத்தப்படுத்திவிட்டு சென்றால் வெள்ளிக்கிழமை காலை லக்ஷ்மி கடாட்த்துடன் சமையலை தொடங்கலாம்.
* வெள்ளிக்கிழமை நாட்களில் வீட்டில் ஒட்டடை அடிப்பது வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை நாட்களில் பெண்கள் சமைக்கும் பொழுது பருப்பு சேர்த்து தான் சமைப்பார்கள். அவ்வாறு சேர்க்கவில்லை என்றாலும் சாதம் வடிக்கும் பொழுது மூன்று துவரம் பருப்பை சேர்த்து வடிக்க வேண்டும்.
* வெள்ளிக்கிழமை நாட்களில் துணிகளை துவைப்பதை கண்டிப்பாக தவிர வைக்க வேண்டும். வீடுகளில் உள்ள குப்பை தொட்டிகளை வாரத்திற்கு மூன்று முறை சுத்தம் செய்வது மூலம் வீடு மங்களகரமாக மாற்றும்.

* பெண்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் தாலி கயிரை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் ஆன பெண்கள் ஒரு மெட்டியை மட்டும் தான் அணிய வேண்டும். மூன்று மெட்டிகள் அணியக்கூடாது.
* வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் நாட்களில் பாகற்காய் போன்ற கசப்பான உணவுகளை சமைக்க கூடாது. முக்கியமாக பெண்கள் புடவை கட்டும் பொழுது முந்தியை தொங்கவிடக் கூடாது. * அதேபோல் மாதவிலக்கு நாட்களில் பெண்கள் தலையில் பூ வைப்பதை முற்றிலுமாக தவிப்பது நல்லது.

* பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது தூய்மையான ஆடையை அணிந்து செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக பாரம்பரிய முறைப்படி தாவணி, சேலை போன்ற உடையை தேர்ந்தெடுத்து அணிந்து செல்வது தெய்வீக உணர்வை தரும்.
* பொதுவாக பெண்கள் இந்த காலகட்டங்களில் நவீன வளையல்களை அணிவதால் அதில் சத்தம் வருவதில்லை. அப்படி அணியக்கூடாது. சுப காரியங்கள் செய்யும் பொழுது வளையல் அணியாமல் செய்யக்கூடாது. மங்களகரமான ஓசையை கண்ணாடி வளையல்கள் தான் தரும். இந்த மங்கள ஓசை கேட்கும் போதெல்லாம் மகாலட்சுமி குடியிருக்கும்.
English Summary
Pengalukana Anmika thagavalgal