கனவில் இந்த பொருட்கள் வந்தால் என்ன பலன்.?
kanavu palan 35
கனவு காண்பது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். அப்படிப்பட்ட கனவில் என்ன பொருட்கள் வந்தால் என்ன பலன் என்பது குறித்து பார்ப்போம்.
அரிசி மூட்டையைக் கனவில் கண்டால் செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும் மற்றும் லாபம் அதிகரிக்கும்.
அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் உண்டாகும்.
இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தைக் குறிக்கிறது.
இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்களாய் இருந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால், வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதானப்போக்கும் உண்டாகும். மேலும், உடன் இருப்பவர்களால் மன நிம்மதி குறையும் என அர்த்தம்.
இறைச்சியை நீங்கள் கொண்டு செல்வது போல் கனவு கண்டால் விரைவில் நீங்கள் பெரும் புகழை அடையப் போகிறீர்கள், அந்த புகழ் உங்களுக்கு ஓரளவு செல்வத்தை தேடி கொடுக்கும் என்று பொருள்.
உடைந்த கண்ணாடியை கனவில் கண்டால், உங்களை சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள். அதனை சற்று தளர்த்தி கொள்வது அவசியம். மேலும், பொறுமையுடன் நடந்து
கொள்வது நல்லது.
உடுக்கையை கனவில் கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
உப்பைக் கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.
உரம் இடுவதாக கனவில் கண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.
எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.
ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. ஏணியில் இருந்து கீழே இறங்குவது போல் கனவு கண்டால் தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
ஒரு மேஜையை கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமாக வழக்குகள் முடிவுக்கு வரும் அல்லது பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை ஏற்படும் என்று பொருள்.