வெள்ளிக்கிழமை வழிபாடு... வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருக... இந்த பூஜையை செய்யுங்கள்.!!
friday special 10
வீட்டில் இருக்கும் கஷ்டங்களும், துன்பங்களும் தீர்வதற்கும், மகாலட்சுமி கடாட்சம் இல்லாத வீடுகளில் மகாலட்சுமி குடியேறவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
வழிபடும் முறை :
வெள்ளிக்கிழமை அன்று வீட்டையும், பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையின் தரையில் பன்னீர் தெளித்து தலைவாழை இலை ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
அதில் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய தாம்பூல தட்டில் 108 மல்லிகை பூக்களையும், அதனுடன் குங்குமத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பூஜையில் தேங்காய்க்கு, மல்லிகைப் பூக்களாலும், குங்குமத்தாலும் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.
முதலில் ஒவ்வொரு மல்லிகைப்பூவை எடுத்து தேங்காய்க்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் பொழுதும் மகாலட்சுமி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின் குங்குமத்தை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு தேங்காய்க்கு அர்ச்சனை செய்தால் வீட்டிற்குள் குலதெய்வமும், மகாலட்சுமி தேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். அவர்களுக்கு நைவேத்தியம் படைக்க சிறிதளவு கல்கண்டு வைத்தால் போதுமானது.
மகாலட்சுமி மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலட்சுமியை நம:
பூஜை நிறைவடைந்த பின் மஞ்சள் தோய்த்த துணி ஒன்றை எடுத்து, அதில் இந்த தேங்காயை வைத்து மஞ்சள் நிற நூலினால் நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சை வீட்டின் தலை வாசலுக்கு நடுவில் இருக்கும் ஆணியில் மாட்டி விட வேண்டும்.
இதுபோல் தொடர்ந்து ஒன்பது முறை செய்து வர எத்தகைய துன்பங்களும் நீங்கும். இப்படி செய்த பின் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்; சாம்பிராணி தூபம் காண்பித்து வர வேண்டும். இதனால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் அதிகரித்து வறுமை நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும்.