மீன ராசியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பாங்க..? எந்த கோவில் போனா நல்லது நடக்கும்..? - Seithipunal
Seithipunal


12 ராசிகளில் 12 வதாக  வரும் ராசி மீனம்.  ராசியின் அதிபதி குரு பகவான். உங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 03-ஆம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டு அமைந்துள்ளது. ஆதலால் உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருக்கும்.

இந்த மீன ராசியில் பிறந்த நீங்கள் அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். குருவின் தனுசு ராசியில் பிறந்ததால்  ‘பட்…பட்’ என்று பேசுவீர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் முடிவு எடுப்பார்கள் ஆனால், மீன ராசியில் பிறந்த நீங்கள் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

உங்கள் ராசியின் தனகாரகனான குருமீன ராசியில் பிறந்தவர்கள் . யாராவது உங்களை அவமானப் படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். அத்துடன், உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள். உங்களின் வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதி செவ்வாய். இவர் உங்களின் 09-ஆம் அதிபதியாகவும் வருகிறார். 09-ம் இடம் பாக்கிய ஸ்தானம். எனவே வாக்கினால், அதாவது பேசியே நிறைய  பணம் சம்பாதிப்பீர்கள்.

05-ஆம் இடத்துக்கு அதிபதி சந்திரன். இது பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும். ஆதலால், உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத்தரம் மேம்பட கூடும். இந்த ராசியில் பிறந்தவர்கள் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்வீர்கள். 08-க்கு உரியவன் சுக்கிரன்.உங்களுக்கு திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆயுள்காரகராகிய சனி துலா ராசியில் உச்சம் அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

09-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு அதிபதி செவ்வாய். இதனால், தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறப் பார்ப்பீர்கள். அத்துடன், அப்பாவைப் பின்பற்றினாலும் வித்தியாசமாக முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.  ‘தந்தைக்கு நம்மிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அவ்வப்போது நினைத்து ஏங்க கூடியவர்க்ளாக இருப்பீர்கள். 

10-ஆம் இடமான ஜீவன ஸ்தானத்துக்கும் உங்களின் ராசி அதிபதியான குரு வருகிறார். இதனால், உங்களில் பலரும் சுயதொழிலில் ஈடுபடவே விரும்புவீர்கள். சிலர் நீதி, கணக்குத் தணிக்கை, வங்கி, பதிப்பகம் போன்ற துறைகளில் புகழுடன் பணம் சம்பாதிப்பீர்கள். எத்தனை பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

மீன ராசி கடலும், நீரும், அதைச் சார்ந்த பகுதிகளை குறிக்கிறது. பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம்.

இங்கு கருவறையிலேயே நீர் ஏறும்; இறங்கும். இந்தத் தல அம்பாள் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்கிவர நல்ல முன்னேற்றங்கள் நடக்கும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Common characteristics of people born under the Pisces sign


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->