வாட்ஸ்அப்பில் இனி வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டோரியாக வைக்கலாம்.. அசத்தலான அப்டேட்.!
Voice message story in WhatsApp update
அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே ஸ்டேடஸ் மட்டுமே வைக்க முடியும். இந்த நிலையில் தற்போது வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேடஸ் வைக்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் படிப்படியாக இந்த அப்டேட்டை செயல்படுத்த உள்ளது.
English Summary
Voice message story in WhatsApp update