டிரெண்டிங்கில் #ஸ்டாலினின்_தளபதி.! பின்னணியை கேட்டா குஷியாயிடுவீங்க.!  - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக பணியாற்றி வருபவர் துரைமுருகன். இவர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகிக்க இருக்கின்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருடைய மகன் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று அவருக்கு 82வது பிறந்த நாள். அவருக்கு பல அரசியல் பிரமுகர்களும், நாட்டின் முக்கிய கட்சி தலைவர்களும், திமுக உடன் பிறப்புகளும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது துரைமுருகன் கட்சியின் பொருளாளராக இருந்து அவருக்கு வலதுகரமாக இருந்து வந்தார். 

இந்நிலையில் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னரும் அக்கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்கு துணை நிற்கின்றார். அவரது இந்த சேவையைப் போற்றும் வகையில் திமுகவினர் ட்விட்டரில் #ஸ்டாலினின்_தளபதி என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Treading Hashtag about DMK Stalin Ails Thalapathi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..




கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..




Seithipunal