ட்விட்டரில் ரஜினியின் வீடியோ காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் திமுக மற்றும் உபிக்கள்?..! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 182 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 308,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,068 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

மருத்துவ நிபுணர்களும் இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 332 பேருக்கு பரவியுள்ளது. மேலும், 5 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த இன்று (21/03/2020) ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா தொடர்பாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ காட்சியில் கூறப்பட்டுள்ளவை விதிமுறைகளுக்கு முரண்பாடாக உள்ளதாக கூறி ட்விட்டர் தளத்தில் இருந்து வீடியோ காட்சியை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. மேலும், இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியான சில மணிநேரத்திலேயே பெரும் வைரலானது. 

இந்த வீடியோ நீக்கப்பட்டதை அடுத்து ரஜினிகாந்தை எதிர்த்து வரும் சில நபர்கள் பலமான முட்டுகளை கொடுத்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கூறப்பட்டு, ட்விட்டர் கணக்கின் முதலில் அது தெரியுமாறு இணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது கடந்த மூன்று நாட்களாக பெரும் வைரலாகாத நிலையில், ரஜினியின் ட்விட் வைரலானதால் உபிகளின் முயற்சியால் ரஜினியின் வீடியோ நீக்கப்பட்டுள்ளதாக சமூக விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth twitter video deleted


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->