வாட்ஸ் அப் செயலியின் அசத்தல் அப்டேட்.. பயனர்கள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் எக்ஸ்பைரிங் க்ரூப் என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளது. அதன்படி இந்த வாட்ஸ் அப் குரூப் குறிப்பிட்ட நாள், வாரம் அல்லது குறிப்பிட்ட தேதி வரை வாட்ஸாப் குரூப்பை வடிவமைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதன்படி அந்த குறிப்பிட்ட காலம் முடிந்துவிட்டால் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் காலம் முடிந்து விட்டதாக பயனர்களுக்கு தெரிவிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New update for WhatsApp group


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->