எது., எது.. என்னடா இப்படியெல்லாம் கிளம்பிடீங்க.. சர்வ வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் அருளால்., வைரலாகும் பத்திரிகை.! - Seithipunal
Seithipunal


இந்து பத்திரிக்கை போல, குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு தயாரிப்பு செய்யப்பட்டுள்ள பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மதம் மாற்றும் பிரச்சனை என்பது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எதிர்வரும் காலங்களில் மதத்தினை வைத்து அரசியல் செய்ய ஒருபுறம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்துக்களாக இருந்து கொண்டே இந்துக்களை இந்து பண்பாடுகளை எதிர்ப்பு தெரிவித்து வரும் கட்சிகளுக்கு மத்தியில், பிற மதங்கள் திணிப்பு தொடர்பான சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

ஒரு குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட மதத்தினர் அதிகளவு வாழ்ந்தால், அங்கு சிறுபான்மை மக்களாக இந்து மக்கள் வாழ்ந்து வந்தால், அங்கு அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் இன்றளவும் வெளிவராமல் தொடர்ந்து வருகிறது. அதே நிலை சிறுபான்மையாக இந்து மக்கள் வாழும் பகுதிகளில் தங்களின் குறைந்தபட்ச உரிமைகளை கேட்டால், அங்கு கட்டவிழ்த்து விடப்படும் சர்ச்சைகள் உலகளவில் வைரலாகி மொத்த இந்துக்களையும் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பது போல திருப்பி விடுகிறது. 

இந்நிலையில், குழந்தைக்கு முதல் பிறந்தநாள் அழைப்பு விழாவில் பத்திரிக்கை போல அச்சடித்து, அதில் இந்துக்களின் பாரம்பரியப்படி ஆரம்பிக்கப்படும் வாசகங்களை போலவே பத்திரிகை விநியோகம் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த பத்திரிகையில், " குழந்தையின் முதல் பிறந்தநாள் அழைப்பிதழ். இயேசுமரி சூசை துணை. 

அன்புடையீர் வணக்கம்.. சர்வ வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் அருளால் நிகழும் கிருத்துவ ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி 2021 ஆம் வருடம் சனிக்கிழமை, எனது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு வருகை தந்து பிள்ளையை ஆசீர்வதித்து, நடைபெறும் விருந்து உபசரிப்புகளிலும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் " என்று கூறப்பட்டுள்ளது. 

மதமாற்றம் என்பது அடக்குமுறைகளால் நடந்து வருவதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், இதுபோன்று இந்து மதத்தின் அடிப்படையில் செயல்பட்டு, மக்களின் மனதை மாற்றி மதமாற்றம் செய்யும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. 
.
Tamil online news Today News in Tamil

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Birthday Invitation Trending Social Media Like Hindu Invitation Creation of Christian Family


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->