பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த வாலிபர் வெட்டிக் கொலை; மனமுடைந்த காதலி தற்கொலை!
Youngster Murdered by Lovers Relation
பிறந்தநாள் வாழ்த்துக்கூற வந்த இளைஞன் பெண்ணின் உறவினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் மனமுடைந்த அவரது காதலி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள, காந்தி நகரைச் , சேர்ந்தவர் பிரசாந்த்(21). இவர் லோடுமேனாக பணியாற்றி வந்தார். அப்போது , மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா(18) என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவரின் காதல் குறித்து, பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு காத்திருக்கும்படி இருவருக்கும்,இரு வீட்டுப் பெற்றோர்கள் அறிவுரை சொல்லி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தன்யாவின் பிறந்தநாள் வந்திருக்கிறது. அப்போது, காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக, அன்று விடியற்காலை,பிரசாந்த் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு மதுபோதையில் தன்யாவின் வீட்டுக்கு வந்தார்.
இதைப் பார்த்த தன்யாவின், பெற்றோர்களுக்கும், பிரசாந்துக்கும், இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது, ஆத்திரமடைந்த தன்யாவின் உறவினர் விக்னேஷ் திடிரென பிரசாந்தை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
இந்நிலையில், காதலன் உயிரிழந்த சோகத்தில், தன்யா மறுநாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.இதைப் பார்த்த, குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அதன்பின், வீடு திரும்பிய, தன்யா நேற்று முன்தினம், வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் தன்யா, எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதைப்பற்றி தகவல் அறிந்த கோவை, செட்டிபாளையம் போலீஸார், சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று ,உடலத்தை மீட்டு மருத்துவ பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலிசார், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
English Summary
Youngster Murdered by Lovers Relation