அடங்காத மனைவியை கள்ளகாதலுனுக்கே தாரைவார்த்த கணவன்! இது உ.பி சம்பவம்!
UP illegal affair husband action
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மனோஜ், மனைவி ரூபி, ஒரு மகன், ஒரு மகள் என குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ரூபி, பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டார். இருவரும் அடிக்கடி தனியாகச் சந்தித்து வந்தனர்.
இந்த உறவு குறித்து மனோஜ் அறிந்ததும், மனைவியை பலமுறை எச்சரித்து, அந்த தொடர்பை முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். சில நாட்களுக்கு முன், வெளியூரில் வேலைக்கு செல்கிறேன் என கூறி மனோஜ் வீட்டைவிட்டுச் சென்றார். ஆனால், அவர் திடீரென திரும்பி வந்தபோது, ரூபி தனது கள்ளக்காதலனுடன் படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோபத்தில் இருவரையும் அறைக்குள் பூட்டிய மனோஜ், சிறிது நேரம் சிந்தித்த பின் எதிர்பாராத முடிவெடுத்தார். கோபத்தை தணித்த அவர், மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைக்க தீர்மானித்தார்.
உடனே ரூபியின் பெற்றோரைக் கூப்பிட்டு, நிலையை விளக்கி சமாதானம் செய்து, திருமணத்திற்கு அவர்களின் சம்மதத்தை பெற்றார். பின்னர், இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார்.
இதற்குப் பிறகு, ரூபிக்கு ஒரு ஒப்பந்தக் கடிதம் எழுதிய மனோஜ், இனி உனக்கும் எனக்கும் எந்தவித உறவும் இல்லை, நீ உன் புதிய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என கையெழுத்து வாங்கி கொண்டார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
UP illegal affair husband action