வெளியானது ட்ரெய்லர்...! வித்தியாசமான கதைகளத்தை கொண்ட 'இந்திரா' படம்....
Trailer released Indira film with different storyline
தமிழ் திரையுலகில் நுழைந்து ஜெயிலர் படத்தில் தனது அசாத்திய நடிப்பை கொடுத்த நடிகர் ''வசந்த் ரவி ராக்கி''.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகனாக கலக்கி இருந்தார்.

இவர் அடுத்ததாக ''இந்திரா'' என்ற க்ரைம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தில் வசந்த் ரவி, காவல் அதிகாரி, காதலன் மற்றும் பார்வையற்றவர் என்று இவருடைய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார்.இப்படத்தின் டிரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த ட்ரெய்லரில் அடையாளம் காண முடியாத தொடர் கொலைகாரனை பிடிக்க காவலர்கள் மேற்கொள்ளும் விசாரணையுடன் தொடங்குகிறது. இதில் கல்யாண் மாஸ்டர், இந்த விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரியாகவும்,அதே நேரத்தில் பார்வையற்ற வசந்த் ரவி, தனது நண்பரின் உதவியுடன் கொலைகாரனை தனிப்பட்ட முறையில் தேடுகிறார்.
சுனில், வில்லனாக தோன்றும் விதத்தில் காதலிக்கு மெஹ்ரா. இதில் அனிகா சுரேந்திரனும் சிறப்பான காட்சிகளில் தோன்றும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
English Summary
Trailer released Indira film with different storyline