அடுத்த வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் 'பரதா' படம்...! - ஆனந்தத்தில் அனுபமா
Bharatha movie ready for next release Anupama joy
பிரபல நடிகை 'அனுபமா பரமேஸ்வரன்' கடைசியாக ''ஜானகி'' படத்தில் நடித்திருந்தார்.இவர் தற்போது தனது அடுத்த படமான ''பரதா''வின் திரைவெளியீடுக்காக தயாராகி வருகிறார்.இந்தப் படத்தை 'பிரவீன் காண்ட்ரேகுலா' இயக்கியுள்ளார்.இவர் 'சினிமா பண்டி' மற்றும் 'சுபம்' போன்ற பாராட்டப்பட்ட படங்களை இயக்கியவர்.

இப்படம் வருகிற 22-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகர் ராம் பொதினேனி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த டிரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும், மேலும் அதிகரித்துள்ளது.
இதில் தர்ஷனா ராஜேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரதா, கிராமத்தைச் சேர்ந்த சுப்பு என்ற இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மேலும், இதில் ராஜேந்திர பிரசாத்,ராக் மயூர், சங்கீதா க்ரிஷ் மற்றும் ஹர்ஷா வர்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
English Summary
Bharatha movie ready for next release Anupama joy