அச்சச்சோ மறந்துட்டேனா...!!! விஜயகாந்தின் பிறந்தநாள் தேதியை மாற்றி கூறிய பிரேமலதா...!
Premalatha changed Vijayakanths birthday date
தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில், தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்க நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட நெடுசாலை, ராயக்கோட்டை, சூளகிரி,வேப்பனப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது வேப்பனப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை கிராமத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது,"ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் என்று தெரிவிப்பதற்கு பதிலாக, டிசம்பர் மாதம் 25-ந் தேதி விஜயகாந்த் பிறந்தநாள்.
அன்று தே.மு.தி.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.இதன் காரணமாக அங்கு திரண்டு இருந்த தொண்டர்களிடையே குழப்பம் நிலவியது.
மேலும், கூட்டத்திலிருந்து ஒரு சிலர் அது டிசம்பர் மாதம் அல்ல ஆகஸ்டு மாதம் எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரேமலதா அவர்கள், ‘விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதை திரையரங்குக்கு சென்று கண்டு மகிழுங்கள்’என்று தெரிவித்தார்.
English Summary
Premalatha changed Vijayakanths birthday date