தந்தூரி ரொட்டியில் எட்டி பார்த்த பல்லி - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்.!!
Lizard found in tandoori rotti
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், சௌபேபூரில் ராமையா ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பரோட்டாக்கள் மிகவும் பிரபலமானவை. அதனால், ஏராளமான மக்கள் தந்தூரி ரொட்டி வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவகத்திற்குச் சென்றார். அங்கு அனைவரும் தந்தூரி ரொட்டிகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு தந்தூரி ரொட்டியில் ஒரு பல்லி காணப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளருடன் சண்டையிட்டனர். இந்த ரொட்டி சாப்பிட்டதில் ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டது.
உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Lizard found in tandoori rotti