இரவு 7 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
tamilnadu 11 districts Rain chance
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த மூன்று மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
tamilnadu 11 districts Rain chance