பீகார் தேர்தல்: அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை கட்சியிலிருந்து நீக்கிய நிதிஷ் குமார்!
Nitish Kumar JDU Bihar Election 2025
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் இந்தத் தேர்தலின் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில், ஆளும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மற்றும் பாஜக இணைந்து உருவாக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் உட்பட 11 முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ஷியாம் பகதூர் சிங், சுதர்சன் குமார், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்கள் சஞ்சய் பிரசாத் மற்றும் ரன் விஜய் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு, கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக ஜேடியு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பீகார் அரசியலில் ஏற்கனவே கூட்டணி சிக்கல்கள், இடமாற்றங்கள் என குழப்பம் நிலவி வரும் நிலையில், ஜேடியுவின் இந்த நடவடிக்கை தேர்தலுக்கு முன் கட்சியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Nitish Kumar JDU Bihar Election 2025