"மாரி"யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இதுவல்ல முதல்வர் அவர்களே... தமிழிசை கண்டனம்!
BJP Tamilisai Condemn to dmk mk stalin
பாஜகவின் தமிழிசை சவுந்தராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக முழுவதும்... தரையில் மழை எனும் ""மாரி" யால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டிருக்கும் பொழுது முதல்வர்.. அவர்களை சென்று பார்க்காமல் திரையில்.. பார்த்ததை மகிழ்ந்து இயக்குனர் "மாரி"யின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார்...
மை சன்னை(my son).. துணை முதல்வர் ஆக்கிவிட்டேன்.. இனிமேல் விவசாயிகளின் சன்(son) களை பற்றிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.. பைசன் (Bison).. பார்த்தால் போதும் என மகிழ்ந்திருக்கிறார் முதல்வர்...
விளையாட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டியதுதான்... ஆனால் பொது மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது முதலமைச்சர் அவர்களே..
மக்கள் "மாரி" யில் நனைந்து இயங்க முடியாமல் இருக்கும் பொழுது இயக்குனர் "மாரி"யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதல்வர் அவர்களே...
இது மழை காலம் பிழைக்க முடியுமா என மக்கள்தவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்.. பிழை செய்து கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே.. 2026 இதற்கெல்லாம் பதில் சொல்லும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Tamilisai Condemn to dmk mk stalin