தமிழக வெற்றிக் கழகத்தில் அதிரடி மாற்றங்கள்: 15 துணைப் பொதுச் செயலாளர்கள் நியமனம் - தலைவர் விஜய் அறிவிப்பு!
TVK Chief Vijay Announces Major Party Restructuring 15 Deputy General Secretaries New District Secretary Appointed
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் புதிய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளுக்கான அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பைக் கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்:
திரு. MSM. ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், திருப்பூர் வடக்கு)
திரு. M.C. சம்பத் (முன்னாள் அமைச்சர், கடலூர்)
திரு. K. இராதாகிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர், உடுமலைப்பேட்டை)
திரு. K.V. ராமலிங்கம் (முன்னாள் அமைச்சர், ஈரோடு மேற்கு)
திரு. M. ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், உளுந்தூர்பேட்டை)
திரு. கடம்பூர் ராஜு (முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி)
திரு. K.T. பச்சைமால் (முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி)
திரு. வெல்லமண்டி N. நடராஜன் (முன்னாள் அமைச்சர், திருச்சி கிழக்கு)
திரு. N.R. சிவபதி (முன்னாள் அமைச்சர், முசிறி)
திரு. வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர், விருதுநகர்)
திருமதி S. வளர்மதி (முன்னாள் அமைச்சர், ஸ்ரீரங்கம்)
திரு. Dr. J. சந்தீப் ஆனந்த் (சென்னை)
திரு. K.G. முத்து வெங்கடேஸ்வரன் (திருப்பூர்)
திரு. தொள்ளாமுர் கண்ணன் (விழுப்புரம்)
திரு. VCR. குமரன் (திருவள்ளூர்)
புதிய மாவட்டம் உருவாக்கம் மற்றும் மாவட்டச் செயலாளர் நியமனம்:
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிப் புதிதாக 'திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம்' உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. C. மகேந்திரன், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைவர் விஜய்யின் அறிவுறுத்தல்:
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த தலைவர் விஜய், கட்சியின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த தனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் புதிய நிர்வாகிகள் செயலாற்றுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணியாற்றவுள்ள இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
TVK Chief Vijay Announces Major Party Restructuring 15 Deputy General Secretaries New District Secretary Appointed