தலை குனிய விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்படி தீக்குளிக்க விடுவது மிக தவறு துணை முதல்வரே - தவெக நிர்வாகி கேள்வி!
tvk mani condemn to DMK Udhay
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி லயோலா மணி கொடுத்துள்ள பதிலில், "உங்க நாய். நீங்கள் தாராளமாக விளையாடுங்கள். உங்கள் விளையாட்டு தனத்தை உலகமே பார்த்து வருகிறது.
அதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றுங்கள். உங்கள் கட்சியை சேர்ந்தவரே தீக்குளிக்கும் நிலைக்கு மக்கள் சொல்ல முடியாத வேதனை நிலையில் இருக்கிறார்கள்.
உங்கள் ஆட்சி எப்பொழுது முடியும் என்று காத்திருக்கிறார்கள்.
தலை குனிய விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்படி தீக்குளிக்க விடுவது மிக தவறு துணை முதல்வரே.
விளையாட்டு பிள்ளையாக இருக்காமல் அப்பாவிடம் சொல்லி வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற சொல்லுங்கள்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் - 221 ல் சொல்லி உள்ளீர்கள். தெரியுமா? செய்தீர்களா?
நீங்கள் மக்களின் வாழ்க்கையோடும் விளையாடு வருகிறீர்கள்.
மின் கட்டணத்தை கணக்கிட வரும் பணியாளர்களிடமே மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையும் கொண்டுவரப்படும் என்று சொன்னீர்கள். செய்தீர்களா?
தவெகவை வளர விடாமல் எப்படி தடுக்கலாம் என்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு மக்களின் வளர்ச்சியை எப்படி உயர்த்தலாம் என்று சிந்தியுங்கள்.
தயவு செய்து மக்களை வாட்டி வதைக்காதீர்கள் DEPUTY CM SIR
வக்கீல் சார் சரவணன் (திமுக செய்தி தொடர்பாளர்) இதை என்னன்னு விசாரியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tvk mani condemn to DMK Udhay