மது வாங்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் - பெற்ற தாயை அடித்துக்கொன்ற மகன்.!!
man arrested for kill mother in kerala
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேராம்பரா அருகே கூத்தாளி பகுதியை சேர்ந்தவர் லினிஷ் தாயார் பத்மாவதி. இவர் கடந்த 5-ந் தேதி வீட்டில் சுய நினைவிழந்து கிடந்ததாக கூறி அவரை லினிஷ் பேராம்பரா துவக்க நிலை சுகாதார மையத்திற்கு கொண்டு வந்தார்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பத்மாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே பத்மாவதி மரணத்தில் சந்தேகமுள்ளதாக கூறிய அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் லினிஷிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், குடிபோதைக்கு அடிமையான லினிஷ் சம்பவத்தன்று பத்மாவதியிடம் மது வாங்க பணம் கேட்டதும், அதற்கு அவர் மறுத்ததால் அவரை தாக்கி நகைகளை பறித்து கொண்டு சென்றதும், சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த போது அவர் மயங்கி கிடந்ததை பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், அங்கு அவர் இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பத்மாவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லினிஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
man arrested for kill mother in kerala