தேர்தல் 2026: புதிய நிர்வாகிகளுடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ஆலோசனை!
TN Assembly election 2026 BJP
அ.தி.மு.க. உடன் கூட்டணியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் சென்னை வந்து, கமலாலயத்தில் முக்கிய ஆலோசனையில் கலந்து கொண்டார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல். முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை, மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் நியமிக்கப்பட்ட புதிய மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 175 நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பி.எல். சந்தோஷ் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிமுறைகள் மற்றும் முக்கிய வியூகங்களை விளக்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக் கொள்வது, ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைப்பது போன்ற விவாதங்களும் நடந்தன. பா.ஜ.க. கூட்டணியின் வலிமையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் செல்போன்களை அணைத்து, அடையாள அட்டை மூலம் மட்டுமே அனுமதி பெற்றனர். பெண்கள் தலைவர்களுக்கு ராக்கி கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகை நமீதா அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அலுவலகம் கொடிகள், தோரணங்கள், வாழைமர அலங்காரங்களுடன் விழாக்கோலமிட்டிருந்தது.
English Summary
TN Assembly election 2026 BJP