சிஎஸ்கே அணியில் நானா..? சஞ்சு சாம்சன் சொன்ன செய்தி!
Sanju Samson CSK
சிஎஸ்கே அணியில் இணைவது குறித்து சஞ்சு சாம்சன் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் சாம்சன், இதுவரை 306 டி20 போட்டிகளில் 7,629 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக சில போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார்.
சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர வாய்ப்புள்ளதென சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தோனியின் வயது மற்றும் உடல் நிலையை முன்னிட்டு அடுத்த சீசனில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த சூழலில், அஸ்வின் தனது யூடியூப் நேர்காணலில் சஞ்சுவிடம், “நான் கேரளவுக்கு போகிறேன். நீ தமிழ்நாட்டுக்கு மாறப்போகிறாயா?” என கேள்வி எழுப்பினார்.
சஞ்சு சில நொடிகள் சிரித்தபின், “அண்ணா, அது என் கையில் இல்ல. நடந்தால் பார்க்கலாம்” என்று பதிலளித்தார்.
டிசம்பரில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில், சாம்சனை சிஎஸ்கே அணியில்இணைக்கும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.