காதல் திருமணம் : சார் பதிவாளர் அலுவலகத்தில் மாமனார் மருமகன் இடையே வாக்குவாதம்-கைகலப்பு-சமாதானம்.!
oothankarai love marriage fight
கிருஷ்ணகிரி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு திருமணம் செய்ய வந்த மணமக்கள் வீட்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று காலை திருமணத்தை பதிவு செய்ய வந்த மணமகள் வீட்டார் இடையே கை கலப்பு ஏற்பட்டு பின் சமாதானம் ஆகியது.
ஊத்தங்கரை அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சத்தியவாணி என்பவரும், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து திருமணத்தை பதிவு செய்வதற்காக ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது சாட்சி கையெழுத்திட மறுத்த மணப்பெண் தந்தைக்கும், மணமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் கார்த்திக்கிடம் அவரின் மாமனார் மன்னிப்புக் கோரினார். இதனையடுத்து மணமக்கள் இருவரும் பதிவு திருமணம் நல்ல முறையில் சிறப்பாக நடைபெற்றது.
English Summary
oothankarai love marriage fight