கணவன் மனைவி தெரிந்து கொள்ள வேண்டிய சில வாழ்க்கை வழிமுறைகள்.!! - Seithipunal
Seithipunal


திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச் செய்ய வேண்டும்.

 எப்படியெல்லாம் நாம் சொதப்புகிறோம் என்று தெரியுமா? இந்த விஷயத்தை நடைமுறையில் கொண்டு வர விரும்பினால், தம்பதிகள் தினமும் சில விஷயங்களை செய்ய வேண்டும். 

* முத்தம்., நீங்கள் ஒன்றாக இருக்கும் நாளில் முத்தம் கொடுத்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். உங்களுடைய துணையின் மேல் நீங்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்த உங்களின் ஒரு முத்தம் உதவி செய்யும்.

* நேரம் ஒதுக்குங்கள்., உங்கள் துணையோடு நேரத்தை கழியுங்கள். உறவு வளர்ந்து வரும் நேரத்தில், உங்களிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்து மகிஷி கொள்ளுங்கள். 

* முடிவுகள்., தங்களிடையே புதிய விஷயங்களை வளர்க்க விரும்பும் தம்பதிகள், மிகவும் யோசித்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். பொதுவாக ஈர்ப்பூட்டும் விஷயங்களை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் விரும்பும் விஷயங்களும் கூட உங்கள் துணையிடம்  இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். 

* மாற்றங்கள்., ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரு நபர்கள் போதுமான அளவிற்கு பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். சூழலுக்கு ஏற்றபடி உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது நீங்கள் இருவரும் செய்ய வேண்டிய விடயமாகும். 

* மன்னிப்பு., நீங்கள் இருவருமே மன்னிக்கும் மனவோட்டத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் அடிக்கடி குறை சொல்லிக் கொள்வதை நிறுத்தி கொள்ளுங்கள். 

* உணர்வுகள்., உங்களுடைய உணர்வுகளை எந்தவித மாற்றமும் இல்லாமல், உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வழிமுறையை தினமும் செய்தால் உறவை காதலுடன் வளர்க்க முடியும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband and wife love tips


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->