வீல்சேரில் இருந்த கணவரை பார்த்துக்கொண்ட பெண்ணிற்கு நடந்த துரோகம்...! - Seithipunal
Seithipunal


கடந்த 2016-ம் ஆண்டு, மலேசியா நாட்டை சேர்ந்த பெண் ''நூருல் சியாஸ்வானி''க்கு திருமணம் நடந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார்.இவருடைய கணவர் திடீரென கார் விபத்தில் சிக்கியாதல்,நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.அவரை கவனித்து கொள்ளும் பொறுப்பை நூருல் ஏற்று கொண்டார்.

இவர் 6 ஆண்டுகளாக ஆசை கணவருக்கு டியூப் வழியே உணவு கொடுப்பது, குளிக்க வைப்பது என அனைத்து வேலைகளையும் செய்து, ஒரு குழந்தையை போன்று பராமரித்து வந்திருக்கிறார்.அவரை நன்றாக கவனித்து கொண்டதில் உடல்நலம் தேறி வந்துள்ளார்.இதில் கிடைத்த அனுபவங்களை 2019-ம் ஆண்டு பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.

இதனால், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நூருலை முகநூலில் பின்தொடர்ந்தனர்.அண்மையில்,அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றை நூருல் வெளியிட்டதில், அவருடைய கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்த புகைப்படங்கள் இருந்தன.அந்த பதிவில், "கணவருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

நூருலின் கணவர் குணமடைந்ததும், மனைவியை விவாகரத்து செய்து விட்டு அய்பா ஐசம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். எனினும், கணவர் மீதுள்ள அன்பு மற்றும் பாசம் நூருலுக்கு விட்டு போகவில்லை. அவரை நன்றாக கவனித்து கொள்ளும்படி அய்பாவிடம் நூருல் கேட்டு கொண்டார்.

கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி நூருலை அவருடைய கணவர் விவாகரத்து செய்துள்ளார். அடுத்து ஒரு வாரத்தில் மறுதிருமணமும் செய்து கொண்டார். இந்த தகவலை, மற்றொரு பதிவில், நூருல் வெளியிட்டுள்ளார்.இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.கடந்த 6 ஆண்டுகளாக குழந்தையை போல் கவனித்து கொண்ட நூருலுக்கு கணவரின் ஒவ்வொரு பைசாவையும் கிடைக்கும்படி கோர்ட்டு வழிசெய்ய வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Betrayal woman who taking care her husband wheelchair


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->