டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.  

இதற்கிடையே கடந்த மாதம் 29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர்   30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பங்களை மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 
டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது என்றும், ரில்லியண்ட் நிறுவனம் உற்பத்தி அலகு, உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழகத்தில் நிறுவுகிறது என்று கூறியுள்ள அவர், இந்த மதிப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், 

நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவாக்கம் செய்வது, சென்னையில் ஒரு தயாரிப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும்ஆப்டம் நிறுவனம் தனது தொழிலை திருச்சி, மதுரையில் விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

With Trillion 2000 crore at Rs Memorandum of Understanding Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->