பிரசாரம் தொடங்குமா தடைபடுமா...? - தவெக விஜய் பிரச்சாரத்துக்கு காவல் துறை முக்கிய ஆலோசனை...! - Seithipunal
Seithipunal


சென்னை அரசியல் களத்தில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. நடிகர் விஜய், பெரம்பூரில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எம்.கே.பி நகரை தொடக்கமாக கொண்டு, கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 5 முக்கிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேனில் இருந்து மக்கள் மத்தியில் நேரடியாக தோன்றி பேசும் வகையில் இந்த பிரசாரம் அமைக்கப்படலாம் எனத் தெரிவிக்கிறது.இந்நிலையில், விஜய்க்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்து காவலர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆரம்ப கட்டமாக 3 ஆயிரம் பேர் வரை கூட்டம் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், விஜய்யை பார்க்க அதற்கு மேல் மக்கள் திரள வாய்ப்பு அதிகம் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் சிக்கலான கணக்கிடலில் உள்ளனர்.

இதன் காரணமாக, இந்த பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ரசிகர்களும், கட்சியினரும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நிலையில், காவலர்களின் இறுதி முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will campaign start or be stopped Police department important advice tvk Vijay campaign


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->