மக்களுக்கு ஏன் இந்த அவதி...? மின்தடை இல்லாத நிலையை உடனே உருவாக்குங்கள்...! - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி முழக்கம்!
Why people suffering this Create situation without power outages immediately Premalatha Vijayakanth action
சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் வளையப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் திடீர் மின்தடை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக கடந்த 20-ந்தேதி நள்ளிரவில் வில்லிவாக்கம், திருவொற்றியூர், பட்டாபிராம் உள்ளிட்ட பல பகுதிகள் இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவதியடைந்த மக்கள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் முன்அறிவிப்பில்லாத மின்தடை நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள இந்த கோடைக்காலத்தில் தொடரும் மின்வெட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான மின்தடை நிலவி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோடைகால வெப்பத்தால் ஏற்கனவே மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், மின்சார தட்டுப்பாடு பொதுமக்களின் துயரத்தை மேலும் அதிகரிப்பதாகவும், தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத சூழலை உருவாக்க அரசு தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Why people suffering this Create situation without power outages immediately Premalatha Vijayakanth action