சேலத்தில் அதிரடி வேட்டை...! போதை ஊசி மற்றும் மாத்திரைகள் விற்ற 4 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது...!
Action hunt Salem gang 4 people who selling drug injections and pills arrested cage
சேலம் மாவட்டத்தின் தாரமங்கலம், ஓமலூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதை ஊசி மற்றும் மாத்திரை பயன்பாடு அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை முறியடிக்க காவலர்களுக்கு தீவிர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்பேரில், துணைக் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, தாரமங்கலத்தில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (24) என்பவரை தனிப்படை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடமிருந்து 39 போதை மாத்திரைகள் மற்றும் பல போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் தாரமங்கலம் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தாரமங்கலம் காவல் ஆய்வாளர் பிரகாஷ் மேற்கொண்ட விரிவான விசாரணையில், மல்லூர் ஏர்வாடியைச் சேர்ந்த ஜீவா (24), வீரபாண்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), சேலத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (58) ஆகியோரும் இந்த போதைப்பொருள் விற்பனைச் சங்கிலியில் தொடர்புடையவர்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, ஸ்ரீகாந்த் உள்பட 4 பேரையும் காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சுப்பிரமணி மருந்து பிரதிநிதியாக பணியாற்றி வந்ததும், மொத்தமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, அவற்றை போதை நோக்கத்திற்காக இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த போதை மாத்திரை மற்றும் ஊசி கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Action hunt Salem gang 4 people who selling drug injections and pills arrested cage