திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்கும் வேட்பாளர் யார்..? முதல்வரின் மாஸ்டர் பிளான் இதுவா..? - Seithipunal
Seithipunal


திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 'தவெக' சார்பில் களமிறங்கப்போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், தவெக தலைவர்  விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இன்னும் 06 மாதங்களுக்கு இந்த தொகுதியில், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், தவெக சார்பில் கு.ப. கிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. முன்னாள் அமைச்சரான  கு.ப. கிருஷ்ணன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தற்போது கு.பா. கிருஷ்ணன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் போட்டியில் இருந்து அவர் விலகிக்கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் களமிறக்கப்படலாம் என்ற பேசப்பட்ட நிலையில், அவர், நேரடியாக அமைச்சரவையில் பங்கு பெறாமல் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ள நிலையில், மாநில அரசியலுக்குத் திரும்புவது தற்போதைய சூழலில் நடைபெறாது என கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இவர் ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டின் மூலம் தனது அடையாளத்தை உருவாக்கியவர். அரசுப் பணியில் இருந்தபோதே தனது இருக்கைக்குப் பின்னால் "இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து" என்ற புகழ்பெற்ற வாசகத்தை எழுதி வைத்து, இளைஞர்கள் மத்தியில் பெரும் நேர்மையையும், உத்வேகத்தையும்  ஏற்படுத்தியவர்.

சகாயத்தின் உரைகள் அனைத்தும், தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தீர்க்கமான மாற்றம் வேண்டும் என்ற வலுவான சிந்தனையையே பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், தொடர்ந்து சமூக நல இயக்கங்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிட்ட 36 இளைஞர்களுக்கு ஆதரவு அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இவரது பெயர் அடிபடுவது, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலுக்குத் தவெக  சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளதால், சகாயம்  நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுவாரா அல்லது மாநில ஆட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மறுபுறம் காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி தவெக சார்பில் மாநிலங்களவை எம்.பி யாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who is the candidate entering the fray as the TVK nominee in the Trichy East by election


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->