நெஞ்சம் பதறுகிறது...கோவை சிறுமி படுகொலைக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது...? - அண்ணாமலை கடும் வேதனை - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பதிவில், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மனிதநேயத்தை உலுக்கும் இந்த அரக்கத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் காவலர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக மாநிலத்தில் தொடர்ந்து அச்சமூட்டும் சூழல் நிலவி வருவது மிகுந்த கவலைக்குரியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலை தற்போதும் நீடித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேநேரத்தில், தவெக அரசு பொறுப்பேற்று சுமார் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், பதவியேற்பு நிகழ்வுகள் மற்றும் அரசியல் கொண்டாட்டங்களைத் தாண்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி மற்றும் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

My heart pounding What Tamil Nadu government going say about murder Coimbatore girl Annamalai deep pain


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->