தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஏன் ஒதுக்கவில்லை; நாளைக்குள் பதிலளிக்கவேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீடு நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்திற்கு ஏன் கல்வி நிதியை ஒதுக்கவில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, நாளை ( மே 23) மதியத்திற்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை கல்வி உரிமைச் சட்டத்தில் வழங்குகிறது. 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு 50 சதவீதம், தமிழக அரசு 40 சதவீதம் நிதி தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தரவில்லை. 2021- 23 நிதியாண்டில் மத்திய அரசு நிதி தராத காரணத்தினால், 100 சதவீத நிதியை தமிழக அரசே ஏற்றது என்றும், மத்திய ஆளுங்கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி.,க்கள் கூட இல்லாத காரணத்தினால், தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பின்னர், மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது எனவும், வரும் 28-இல் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடக்கவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.இதன் போது கருது தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர், சில காரணங்களினால், தமிழகத்திற்கு நிதி வழங்கப்படவில்லையென விளக்கமளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட  நீதிபதிகள், '' தமிழகத்திற்கான கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்பது குறித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி குறித்தும் நாளை மதியம் 02:15 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why hasnt the central government allocated education funds for Tamil Nadu Madras High Court questions


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->