எதற்காக மீண்டும் மீண்டும் ind - pak போரை நிறுத்தியது டிரம்ப் என்று கூறுகிறார்...? - ராகுல் காந்தி கேள்வி
Why does Trump repeatedly say that he stopped Ind Pak war Rahul Gandhi questions
கடந்த ஜூலை 21 ஆம் தேதி, பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.இந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கின.இதற்கிடையே, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தாமாக முன்வந்து பதவி விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 3 -ம் நாளாக இன்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் காந்தி:
இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி," இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் பலமுறை தெரிவித்தார்? " என்று கேள்வி எழுப்பினார்.
கார்கே:
இதற்கு முன்னதாக மாநிலங்களவையில் பேசிய கார்கே தெரிவித்ததாவது, "அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தலையீட்டால் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக 24 முறை தெரிவித்துள்ளார். அவர் மீண்டும் மீண்டும் தெரிவிப்பது நம் நாட்டுக்கு அவமானகரமானது" என்று தெரிவித்திருந்தார்.
English Summary
Why does Trump repeatedly say that he stopped Ind Pak war Rahul Gandhi questions