அதிமுக கூட்டணிக்கு தவெக நோ சொன்னது ஏன்? விடாப்பிடியாக நின்ற விஜய்.. இப்படி ஒரு காரணமா?
Why did Thaveka say no to the AIADMK alliance Vijay stood firm is this a reason
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) ஒரு வலுவான அரசியல் கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என சமீபத்தில் ஊடக பேட்டியில் தெளிவுபடுத்திய விஜய், முதல்வர் வேட்பாளர் பதவி தொடர்பாக உறுதியாக உள்ளார். “எந்த சூழலிலும் முதல்வர் வேட்பாளர் பொறுப்பை தானே ஏற்க வேண்டும்” என்ற நிலைப்பாடு காரணமாகவே அதிமுக கூட்டணிக்கு “நோ” சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சியில், ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
த.வெ.க. தி.மு.க.-வின் வாக்கு வங்கிகளான சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களைக் குறிவைத்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, த.வெ.க.-வை வலுவான அரசியல் சக்தியாக நிலைநிறுத்துவதே நோக்கமாகும்.
டெல்லி வட்டாரங்களில், இந்த முயற்சிக்கு “ஆபரேஷன் V” என பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மூத்த தேசிய அரசியல் தலைவர் இதை முன்னெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க.வின் சிறுபான்மையினர் ஆதரவைக் குறைக்கும் நோக்கத்துடன் கூட்டணி அமைப்பு நடைபெறுகிறது எனவும் கூறப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள், த.வெ.க., ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட்டணி அமைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மதிப்பிடுகின்றனர். இது நடந்தால் தென் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் பங்களிப்பால் கிடைத்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் த.வெ.க.வுடன் இணைந்தால், முக்குலத்தோர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவில் அந்த கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. மேலும், விஜய் சரியான தொகுதியைத் தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றி பெற அதிக சாத்தியம் உள்ளது.
தற்போது பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அமமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகள், அவர்கள் கூட்டணியிலிருந்து விலகி விஜய்யுடன் இணைய வழிவகுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இதனால், 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் சூடுபிடித்திருக்கிறது.
English Summary
Why did Thaveka say no to the AIADMK alliance Vijay stood firm is this a reason