நீதான் பண்ணணு சொல்லு! ரூ.2 லட்சம் தருகிறோம்! வேங்கைவயல் சுதர்சன் தாய் பேசும் வீடியோ வைரல்! - Seithipunal
Seithipunal


2 லட்சம் பணம் தருகிறேன், வேங்கைவயல் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலம் கொட்டியது நீ தான் என ஒப்புக்கொள் என போலீசார் என் மகனை கேட்டுக் கொண்டதாகவும், அதை தான் ஒப்புக்கொள்ள வேண்டாம் என நான் சொன்னதாகவும் வேங்கைவயல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுதர்சனின் தாயார் பேசும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அதிமுகவின் ஐடி விங்க் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  "2 லட்ச ரூபாய் தருகிறோம், வேங்கைவயலில் மலம் கலந்தது நீ தான் என ஒப்புக்கொள்" என சுதர்சனிடம் போலீசார் கேட்டதால், அதனை ஒப்புக்கொள்ளாதே என்று தான் சொன்ன ஆடியோ திரித்து கசியப்பட்டுள்ளது என்பதே சுதர்சன் தாயாரின் கூற்று.

ஒரு முக்கியமான வழக்கின் ஆதாரம் எனக் கூறப்படும் AUDIO எப்படி வெளியில் கசிகிறது?

MEDIA TRIAL நடத்தி, அதன் மூலம் தனக்கு சாதகமான Narrative அமைத்து, நீதி விசாரணையை திசைதிருப்ப முயல்கிறதா ஸ்டாலின் மாடல் திமுக அரசு?

வேங்கைவயல் வழக்கில் ஆரம்பம் முதலே இந்த திமுக அரசின் செயல்பாடுகள் வழக்கை முன்முடிவெடுத்து முடிக்கும் நோக்கிலேயே இருந்து வரும் நிலையில், CBI விசாரணையே இதற்கான நீதியை வெளிக்கொணரும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vengaivayal case admk viral video


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->