#வேலூர் || அதிமுக மாவட்ட செயலாளர் விடுவிப்பு! காட்பாடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vellore AIADMK district secretary released in election case
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் அதிகாரிகளிடம் பிரச்சனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அதிமுக மாவட்ட செயலாளர் சொல்லிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வேலூர் மாநகர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அதிமுகவினர் பிரச்சனை செய்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் SRK அப்பு, கழக செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அமர்நாத், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் ராஜசேகர், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 5 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கப்படாததால் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அன்பு உள்ளிட்டு 5 பேரை விடுவிப்பதாக நீதிபதி ஜெய்கணேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
Vellore AIADMK district secretary released in election case