நாங்க அடிமை இல்ல! நீங்க மூக்கு உடைந்தது தான் மிச்சம்! ஸ்டாலினை வெளுத்து விட்ட வளர்மதி!
Varamathi reply MKStalin AIADMK not slave to BJP
பாஜக கட்டி எழுப்பிய தேசிய ஜனநாயக கூட்டணி என்ற கோட்டையில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என அதிமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அதிமுக தலைமை அறிவித்தது. இதனால் திக்கு முக்காடி போன அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை கொண்டாடினர்.
இந்த நிலையை அதிமுக சார்பில் சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திமுக தலைவர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்கூட்ட மேட்டையில் பேசிய அவர் "அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நல்ல அறிவிப்போடு இந்த கூட்டத்திற்கு வந்துள்ளோம். திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் நேற்று வரை அதிமுகவை பாஜகவின் அடிமை கட்சி என மு.க ஸ்டாலின் பேசி உள்ளார்.

ஆனால் இன்று எங்களுக்கும் தன்மானம் உள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வீரம் உள்ளது, எங்கள் அம்மாவின் தைரியம் உள்ளது. எங்களாலும் கட்சியை நடத்த முடியும், ஆட்சியை பிடிக்க முடியும் என்று சொல்லி இன்றைக்கு ஒரு நல்ல முடிவை எடுத்து நேற்று பேசிய மு.க ஸ்டாலின் மூக்கை எடப்பாடி பழனிச்சாமி உடைத்துள்ளார்.
மு.க ஸ்டாலின் எதற்கு எடுத்தாலும் எங்களை பாஜகவுக்கு அடிமை என பேசி வருகிறார். நாங்கள் எந்த காலத்திலும் பாஜகவுக்கு அடிமையாக இருந்தது இல்லை" என மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Varamathi reply MKStalin AIADMK not slave to BJP