நீட் விலக்கை அரசியலாக்க வேண்டாம்!! ஈபிஎஸ்-க்கு உதயநிதி வேண்டுகோள்!!
Urdayanithi request EPS Do not politicize NEET exemption
திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக 50 நாட்களை 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மௌனம் காத்து வந்த ஆளுங்கட்சியான திமுக தற்போது தேர்தல் வரும் நேரத்தில் மாணவர்கள் மீது அக்கறை இருப்பது போல் நடிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தேனி அருகில் நடைபெற்ற திமுக செயல்வீர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசி அவர் "நீட் ஒழிப்பிற்கு எதிராக ஒன்று சேர்ந்து அதிமுக போராட வேண்டும். நீட் விலக்கு வந்தால் அந்தப் பெருமையை அதிமுகவுக்கு தந்து விடுகிறேன்.
நீட் தேர்வை அரசியலாக்காமல் மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம். நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Urdayanithi request EPS Do not politicize NEET exemption