கூலி படம் பார்த்துட்டேன்! ரஜினிகாந்தின் சாதனை ‘வரலாற்றுத் தருணம்’ - உதயநிதி ஸ்டாலின் பூரிப்பு!
Udhayanidhi Stalin wish Rajinikanth
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலையுலகில் தனக்கென ஓர் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் ரஜினிகாந்தின் சாதனையை ‘வரலாற்றுத் தருணம்’ எனக் கூறி, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
மேலும், நாளை வெளியாகும் ‘கூலி’ திரைப்படத்தை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த Mass Entertainer ஆக படம் உருவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கூலி’ வெற்றி பெற ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ், சத்தியராஜ், லோகேஷ் கனகராஜ், அமீர்கான், அனிருத், சுருதிஹாசன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
English Summary
Udhayanidhi Stalin wish Rajinikanth