என்ன மிரட்டி பார்க்குறீங்களா? திமுகவுக்கு பகிரங்க சவால் விட்ட த.வெ.க! விஜய் கட்சியினருக்கு மிரட்டல்! DyCM உதயநிதி தொகுதியில் சம்பவம்! - Seithipunal
Seithipunal


சென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் (து.முதல்வர் உதயநிதி தொகுதி) தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்காளர் சிறப்பு முகாம் செய்யக் கூடாது என்று அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவினர் மிரட்டி வருவதாக, அக்கட்சியை சேர்ந்த லயோலா மணி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வாக்காளர் சிறப்பு முகாமில் மக்கள் தன்னெழுச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தினர் அமைத்துள்ள முகாமிற்கு வந்து ஆலோசனைகள், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் போன்ற தகவல்களை கேட்டு வருகிறார்கள். 

குறிப்பாக தாய்மார்கள் அதிக அளவில் என்னிடம் வந்து பேசுகிறார்கள். இதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர் வேண்டுமென்றே சண்டைக்கு வருகிறார்கள். 

பல தொகுதிகளில் வாக்காளர் முகாம் போடக் கூடாது என்று தவெகவினரை மிரட்டி வருகிறார்கள். 

இதெல்லாம் ஈனச் செயல். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்காளர் சிறப்பு முகாம் செய்யக் கூடாது என்று அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி வருவது கேவலம்.

சேப்பாக்கம் தொகுதி உங்களுக்கு பட்டா எழுதியா கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியாக எங்களை மக்கள் பணி செய்ய விடாமல் செய்வதுதான் சமூகநீதி அரசா? இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? உங்களுடைய மிரட்டலுக்கு பயந்தவர்கள் நாங்கள் இல்லை.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவை பார்த்து திமுக பயம் கொள்வது வெளிப்படையாக தெரிகின்றது. களத்தில் சந்திப்போம்.

ரவுடிசம் செய்யாமல் ஒழுங்காக மக்கள் பணி செய்யுங்கள்.
மக்கள் பணி செய்வதற்குதான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டுள்ளார்கள்.

2026 தேர்தலில் மக்கள் துணையுடன் திமுகவை தோற்கடிப்போம்.

எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம்.
எங்கள் பலம் என்னவென்று களம் உங்களுக்கு உணர்த்தும்.

உங்களின் அச்சுறுத்தல் எங்களை ஒன்றும் செய்யாது.
காமெடி பண்ணாமல் போய்ட்டு வேற வேலை இருந்தால் பண்ணுங்கள். திமுக vs தவெக" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay DMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->