2026 தேர்தல், அரசியல் வேண்டாம் - மேடையிலேயே நிபந்தனை போட்ட விஜய்! - Seithipunal
Seithipunal


10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் "கல்வி விருது விழா" எனும் பெயரில் பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.

2025ம் ஆண்டுக்கான கல்வி விருது விழா மாமல்லபுரத்தில் இரண்டு கட்டங்களாக நடந்தது. முதல் கட்டமாக மே 30 அன்று 88 தொகுதி மாணவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக ஜூன் 4 அன்று 84 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் இடம் பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் வழங்கப்பட்டதுடன், மூன்று சிறந்த மாணவர்களுக்கு ரூ.5,000 மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், 3வது கட்ட பரிசளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் நேரில் கௌரவிக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் உரையாற்றிய விஜய், “2026 தேர்தல், இளைய காமராசர்” போன்ற அரசியல் பேச்சுகளை தவிர்த்து, மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் ஆசிரியர்களைப் பற்றியே பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Vijay condolence plane crash 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->