பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! - Seithipunal
Seithipunal


தொடர் மழை காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை கனமழை பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த சிலநாட்களாக மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.ஒருபுறம் மழை பெய்துவந்தாலும் மறுபுறம் வெப்பம் வாட்டி வதைத்தது. 

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக  கனமழை பெய்துவருகிறது . தொடர் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. மண் சரிவும் ஏற்பட்டது.இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும்  நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School is closed today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->