கரூர் கொடூரம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படும் முன் விமான நிலையத்தில் செய்தியாள்கற்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்தாவது, கரூரில் நேற்று இரவு நிகழ்ந்த கூட்ட நெரிசல் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். இப்படியான துயரச் சம்பவம் நடக்கக் கூடாதது, ஆனால் நடந்துவிட்டது என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். சம்பவம் நடந்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததாக எல்.முருகன் கூறினார்.

மேலும், இந்த கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கோரியிருப்பதாகவும், மாநில அரசு விளக்கம் அளித்த பிறகு அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Karur Stampede TNGovt Central Govt


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->