பயணிகளுக்கு குட் நியூஸ்; கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்..!
Kilambakkam railway station will soon be open to public use
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படும் ரயில் நிலையம் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு இறுதியில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், திறக்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தொலைதூர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல குறைந்தது ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நேரம் செலவிட வேண்டியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் வண்டலூர், ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சுமார், 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நின்று செல்லும் வகையில் மூன்று நடைமேடைகளுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் உருவாகி உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் ஆகாய நடைமேடை கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறவுள்ளது. இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையம், வரும் மே மாதத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Kilambakkam railway station will soon be open to public use